மேலும் செய்திகள்
காணொளி காட்சி வாயிலாக ராஜாஜி மார்க்கெட் திறப்பு
13-Aug-2024
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மண்டலம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய இரு மாவட்டங்களிலும் உள்ள முக்கிய கோவில்களில், பக்தர்கள் தரிசனம் செய்ய, ஒரு நாள் ஆன்மிக சுற்றுலா திட்டம் துவங்கப்பட்டு உள்ளது.அரசு பேருந்தில், ஒரு நபருக்கு 650 ரூபாய் கட்டணத்தில், இந்த ஆன்மிக சுற்றுலா ஏற்பாடு செய்யப்படுகிறது.காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில், காலை 7:20 மணிக்கு துவங்கும் சுற்றுலா, வரதராஜ பெருமாள் கோவில், காமாட்சியம்மன் கோவில், ஏகாம்பரநாதர் கோவில், கோவிந்தவாடி குருபகவான் கோவில் ஆகிய கோவில்களில் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்படுகிறது.மதிய உணவுக்கு பின், திருத்தணி முருகன் கோவில், திருவாலங்காடு தேவார சிலாயம், திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில், ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவில் என, 8 கோவில்களில் தரிசனம் முடித்து, இரவு 8:45 மணிக்கு காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் சுற்றுலா முடிகிறது.இந்த சேவையை, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து, அமைச்சர் அன்பரசன் நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வளாகத்தில், கால்நடை பராமரிப்பு துறை சார்பில், ஐந்து ஊராட்சி ஒன்றியங்களுக்கும் சேர்த்து, மூன்று கால்நடை மருத்துவ வாகன சேவையை, அமைச்சர் அன்பரசன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.இந்நிகழ்வில், கலெக்டர் கலைச்செல்வி, தி.மு.க.,- - எம்.பி., செல்வம், தி.மு.க.,- - எம்.எல்.ஏ., எழிலரசன், மேயர் மகாலட்சுமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
13-Aug-2024