உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / முந்திரி மரங்களில் மகசூல் துவக்கம்

முந்திரி மரங்களில் மகசூல் துவக்கம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி ஊராட்சி உள்ளது. இங்கு, அரசுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தில், 2019ம் ஆண்டு ஊராட்சி நிர்வாகம் மற்றும் விவசாயிகளும் இணைந்து, 100க்கும் மேற்பட்ட முந்திரி மரக்கன்றுகளை நட்டு, பராமரித்து வந்தனர்.சமீபத்தில், அனைத்து முந்திரி மரங்களும், காய்கள் காய்க்க துவங்கி உள்ளன. முழுமையாக மகசூல் வந்த பின், பொது ஏலம் விட்டு வருவாய் ஈட்டுவதற்கு ஊராட்சி நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.இதேபோல, அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களை மீட்டு, வருவாய் தரும் மரங்களை நடவு செய்து, ஊராட்சிக்கு வருவாய் ஈட்டலாம் என, சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ