உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / யு - டியூபர் வராகி மீது புகார் அளிக்க எண் வெளியீடு

யு - டியூபர் வராகி மீது புகார் அளிக்க எண் வெளியீடு

சென்னை: விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் என்ற வராகி, 50; யு - டியூபர். இவர், கூடுவாஞ்சேரி சார் - பதிவாளர் வைத்திலிங்கம் என்பவரை மிரட்டி, பணம் பறிக்க முயன்றுள்ளார்.இது குறித்து விசாரித்த மயிலாப்பூர் போலீசார், வராகியை கைது செய்து புழல் சிறையில் அடைத்து உள்ளனர். தொடர் விசாரணையில், மிரட்டல் விடுத்து பணம் பறிக்க, வராகி தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக, மாநிலம் முழுதும் 200க்கும் மேற்பட்ட சார் - பதிவாளர்களின் சம்பளம் குறித்த விபரங்களை பெற்று இருப்பதும் தெரிய வந்துள்ளது.வராகியால் மிரட்டப்பட்டு, பாதிக்கப்பட்ட விதம் குறித்து, 20க்கும் மேற்பட்டோர் போலீசாரின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளனர்.இதையடுத்து, வராகியால் பாதிக்கப்பட்டோர் தயக்கமின்றி புகார் அளிக்கலாம் என, காவல் துறை சார்பில், 044 - 2345 2324, 2345 2325 ஆகிய தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ