உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்

விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த வையாவூரில், 100 ஆண்டு பழமையான கன்னிமூல கணபதி கோவில் அமைந்துள்ளது. சிதிலமடைந்திருந்த இக்கோவில், பல்வேறு திருப்பணிகளுடன் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. நேற்று முன்தினம் யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று அதிகாலை 4:00 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், இரண்டாம் கால யாக பூஜை நடந்தது.காலை 5:00 மணிக்கு கோபுர விமான கலசத்திற்கும், தொடர்ந்து மூலவர் கன்னிமூல கணபதிக்கும் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேமும் நடத்தி வைத்தனர். மாலை 6:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி