உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மனைவியை தாக்கிய நபருக்கு 10 ஆண்டு சிறை

மனைவியை தாக்கிய நபருக்கு 10 ஆண்டு சிறை

சிக்கபல்லாபூர், மனைவியை தாக்கி கொலை செய்ய முயற்சித்த கணவருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.சிக்கபல்லாபூர், சிந்தாமணியின் கரியப்பள்ளி கிராமத்தில் வசிப்பவர் முனி வெங்கடப்பா. இவரது மனைவி நாகவேணி. குடிப்பழக்கத்துக்கு அடிமையான முனி வெங்கடப்பா, தினமும் குடிபோதையில் வீட்டுக்கு வந்து, மனைவியை தாக்கி இம்சித்தார்.கணவரின் தொல்லையால் வெறுப்படைந்த நாகவேணி, குழந்தைகளுடன் தன் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். 2022ன் மார்ச் 30ல், முனி வெங்கடப்பா மனைவியின் தாய் வீட்டுக்கு சென்று, தகராறு செய்தார்; சரமாரியாக தாக்கினார். இதில் காயமடைந்த நாகவேணி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.இது தொடர்பாக, விசாரணை நடத்திய போலீசார், முனி வெங்கடப்பாவை கைது செய்தனர். பெங்களூரின் இரண்டாவது கூடுதல் மாவட்ட, செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றபத்திரிகை தாக்கல் செய்தனர்.விசாரணையில் இவரது குற்றம் உறுதியானதால், முனி வெங்கடப்பாவுக்கு 10 ஆண்டு சிறை, 40,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை