உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சங்கரா பல்கலையில் 9ல் மாரத்தான் போட்டி

சங்கரா பல்கலையில் 9ல் மாரத்தான் போட்டி

ஏனாத்துார், காஞ்சிபுரம் சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹா வித்யாலயா நிகர்நிலை பல்கலை சார்பில், சங்கரா மாரத்தான் -- 2025' போட்டி,வரும் 9ம் தேதி, காலை 6:00 மணிக்கு பல்கலை வளாகத்தில் துவங்கி நடைபெறுகிறது.இப்போட்டியில் வெற்றி பெறும் வெற்றியாளர்களுக்கு முதல் பரிசாக 10,000 ரூபாயும், இரண்டாம் பரிசாக 5,000 ரூபாய், மூன்றாவது பரிசாக 3,000 ரூபாய் ரொக்கமாகவும் மற்றும் பூமா காலணிகள் பரிசாக வழங்கப்பட உள்ளது.மேலும், நான்காம், ஐந்தாம், ஆறாம் மற்றும் ஏழாம் பரிசுகளாக, 1,000 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட உள்ளது.மாரத்தான் போட்டியில் பங்கேற்கும் அனைத்து போட்டியாளர்களுக்கும், டி-சர்ட், பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.இப்போட்டியில் பங்கேற்க விரும்புவோர் 99769 99557 என்ற மொபைல் போன் எண்ணில், குணாளன், பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநரை தொடர்பு கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை