மேலும் செய்திகள்
பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் நாளை தேரோட்டம்
07-Feb-2025
மாகறல், காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, மாகறல் கிராமத்தில், திருபுவனநாயகி உடனுறை திருமாகறலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் மாசிமக பெருவிழா, நேற்று காலை, கொடியேற்றத்துடன் துவங்கியது. உத்சவம் துவக்க நாளான நேற்று இரவு, இடப வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.விழாவையொட்டி தினமும், காலை, மாலையில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளும் திருமாகறலீஸ்வரர் வீதியுலா வர உள்ளார்.இன்று காலை, சூரிய பிரபையும், இரவு, சந்திர பிரபை உற்சவமும், மூன்றாம் நாள் உற்சவமான நாளை காலை பூத வாகனமும், இரவு மாவடி சேவை உத்சவமும் நடக்கிறது. ஏழாம் நாள் பிரபல உத்சவமான தேரோட்டம், வரும் 9ம் தேதி மாலை, 5:00 மணிக்கு நடைபெறுகிறது.
07-Feb-2025