கூட்டுறவு பணியாளர்களுக்கு பால் பரிசோதகர் பயிற்சி
உத்திரமேரூர்:காஞ்சிபுரம் -- திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் சார்பில், கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு பால் பரிசோதகர் பயிற்சி முகாம், காஞ்சிபுரம் ஆவின் துணைப் பதிவாளர் ஆசீர்வாதம் தலைமையில், தண்டரை கூட்டுசாலையில் நேற்று நடந்தது.உதவி பொது மேலாளர் நாகராஜன், மேலாளர் சதிஷ்குமார் முன்னிலை வகித்தனர். அதில், பாலின் தரத்தை அறிந்து கொள்முதல் செய்ய வேண்டும். பால் பரிசோதனை 2 மணி நேரத்திற்குள் முடிக்க வேண்டும். மில்கோ டெஸ்டர் முறை குறித்து சங்க பணியாளர்களுக்கு செயல் விளக்கம் காட்டப்பட்டது.பாலை பதப்படுத்துவது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. விரிவாக்க அலுவலர் சிவஞானம் உட்பட பலர் பங்கேற்றனர்.