உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஓட்டு எண்ணும் மையத்தில் மொபைல் அனுமதி இல்லை

ஓட்டு எண்ணும் மையத்தில் மொபைல் அனுமதி இல்லை

காஞ்சிபுரம்:தமிழகத்தில், ஏப்.,19ம் தேதி லோக்சபா தேர்தல் நடந்தது. காஞ்சிபுரம் லோக்சபா தனி தொகுதிக்கான ஓட்டு எண்ணும் மையம், காஞ்சிபுரம் அடுத்த, காரப்பேட்டை அறிஞர் அண்ணா பொறியியல் கல்லுாரியில், அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், உயர் பாதுகாப்பு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.ஓட்டு எண்ணும் மையத்தில், மத்திய தொழிலக பாதுகாப்பு படை, போலீசார், 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் உள்ளனர். ஜூன் 4ல், ஓட்டு எண்ணும் பணிகள் நடைபெற உள்ளதால், இங்கு, தடுப்பு வேலிகள் அமைப்பது, மேஜைகள் அமைப்பது போன்ற முன்னேற்பாடுகள் செய்யப்படுகின்றன.வாகனங்கள் நிறுத்துமிடம். முகவர்கள் காத்திருக்கும் இடம் என, ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இந்த தடுப்பு கட்டைகள் மூலமாக, ஓட்டு எண்ணும் மையத்திற்கு வரும் அரசியல் கட்சியினரை கட்டுப்படுத்த எளிதாக இருக்கும் என, போலீசார் தெரிவிக்கின்றனர்.ஓட்டு எண்ணும் நாளான, ஜூன் 4ல், ஓட்டு எண்ணும் பணிக்காக, மையத்திற்குள் வரும் வேட்பாளர்களின் முகவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் கமிஷன் விதித்துள்ளது.ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு வேட்பாளர் சார்பில், ஒரு முகவர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், அடையாள அட்டை கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும்; மொபைல் போன் கொண்டு வரக்கூடாது; குட்கா போன்ற போதை வஸ்துகள் கொண்டு வரக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.முகவர்களுக்கு தேவையான உணவு, டீ, ஸ்நாக்ஸ் போன்றவை ஓட்டு எண்ணும் மையத்திற்குள்ளேயே அவர்களுக்கு வழங்க, வருவாய் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.இதற்காக ஒரு குழுவே இயங்கி வருகிறது. வேட்பாளர்களின் முகவர்கள் கொண்டு வரும் கார், வேன் போன்ற வாகனங்களை, கல்லுாரியின் முகப்பில் உள்ள விசாலமான இடத்தில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை