உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நற்றமிழ் இசை வேந்தர் விருது

நற்றமிழ் இசை வேந்தர் விருது

காஞ்சிபுரம்: நால்வர் நற்றமிழ் மன்றத்தின், 46வது ஆண்டு விழா நேற்று காஞ்சிபுரத்தில் நடந்தது.இந்த விழாவிற்கு, மோகனசுந்தரம் தலைமை வகித்தார். தெய்வ சேக்கிழார் அறக்கட்டளை நிர்வாகி சச்சிதானந்தம் முன்னிலை வகித்தார்.இதில், திருக்கழுக்குன்றம் சொக்கலிங்கம் தேசிகருக்கு, நற்றமிழ் இசை வேந்தர் விருது வழங்கப்பட்டது. தருமை ஆதீனப்புலவர் அருணை பாலறவாயன் சிவபுரணத்தில் நுண் பொருள் குறித்து சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்.அதை தொடர்ந்து, மகேச பூஜை நடந்தது. நால்வர் நற்றமிழ் மன்ற நிர்வாகிகள் மற்றும் சிவனடியார்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி