| ADDED : ஏப் 17, 2024 09:36 PM
சென்னை;மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் முகமது இம்தியாஸ், 30. இவர், தன் குழந்தையை சிகிச்சைக்காக, சென்னை, ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அப்பகுதியில் உள்ள தனியார் விடுதியில் குடும்பத்துடன் தங்கியுள்ளார்.இவர், நேற்று முன்தினம் சிகிச்சை முடிந்து, மனைவி மற்றும் குழந்தையுடன் ஆயிரம்விளக்கு, ராமசாமி தெருவில் உள்ள தனியார் விடுதிக்கு சென்றார். அப்போது அந்த இடத்தில் நின்ற திருநங்கை, குழந்தை மற்றும் பெற்றோருக்கு 'ஆசி' வழங்குவது போல நடித்து, 7,500 ரூபாய் பறித்து தப்பி உள்ளார்.இதுகுறித்து, முகமது இம்தியாஸ் ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் சம்பவ இடத்தில் உள்ள, 'சிசிடிவி' கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்து தேடி வருகின்றனர்.சென்னையில், சபல நபர்களை குறி வைத்து திருநங்கையர் பணம் பறித்து வரும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. குறிப்பாக, கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில், பிரபல ஹோட்டல் உள்ள இடத்தில் இருந்து, லிபர்ட்டி பாலம் வரை திருநங்கையர் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்களிடம் பலர் பணத்தை இழந்துள்ளனர். பின், அவமானம் கருதி போலீசில் புகார் அளிக்காமல் சென்று விடுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.