மேலும் செய்திகள்
ஜப்பான் சிவனடியார்கள் கிளார் கோவிலில் யாகம்
09-Mar-2025
காஞ்சிபுரம், ஏப். 8-காஞ்சிபுரம் அடுத்த, கிளார் கிராமத்தில், அகத்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் அகத்திய மாமுனிவர், மனைவி உலோபமுத்திரையுடன் ராஜ அலங்காரத்தில் தனி சன்னிதியில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.அகத்திய முனிவர் அவதரித்த ஆயில்ய நட்சத்திரத்தையொட்டி பங்குனி மாத ஆயில்ய நட்சத்திரமான நேற்று, அகத்தியருக்கும், உலோப முத்திரைக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.பள்ளி மாணவ - மாணவியர் அகத்தியரின் 108 போற்றியை ஒன்றாக இணைந்து பாராயணம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகிகள், கிராமத்தினர் இணைந்து செய்திருந்தனர்.
09-Mar-2025