உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலை சீரமைப்பால் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து

சாலை சீரமைப்பால் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து

காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டம், பள்ளூர் கிராமத்தில் இருந்து, திருமால்பூர் கிராமம் வழியாக, பனப்பாக்கம் கிராமத்திற்கு செல்லும் நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் பிரதான சாலை உள்ளது.இந்த சாலையின் வழியாக பள்ளூர், கணபதிபுரம், காஞ்சிபுரம், புள்ளலுார் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள், பல்வேறு தேவைகளுக்கு திருமால்பூர், பனப்பாக்கம், ஓச்சேரி ஆகிய பகுதிகளுக்கு தினசரி சென்று வருகின்றனர்.இச்சாலை, கடந்த ஆண்டு இறுதியில், சாலை குண்டும் குழியுமாக சேதமடைந்திருந்தன. வட கிழக்கு பருவ மழைக்கு பெய்த மழையால், தார் ஜல்லி கலவை பெயர்ந்து, வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் விதமாக ஜல்லிகற்கள் பெயர்ந்திருந்தன.இதையடுத்து, பள்ளூர்- - பனப்பாக்கம் சேத பள்ளங்களில், நெடுஞ்சாலைத் துறையினர் ஜல்லி கொட்டி சமப்படுத்தி இருந்தனர். கடந்த மாதம், தார் ஜல்லி கொட்டி சேதமடைந்த பள்ளங்களை மறைத்தனர்.சேத பள்ளங்களை சீரமைத்த இடங்களில், இருசக்கர வாகனங்கள் செல்லும் போது நிலை தடுமாறி செல்கிறது. இதனால், கடந்த வாரத்தில் ஐந்திற்கு மேற்பட்ட விபத்துகள் ஏற்பட்டுள்ளது என, வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.எனவே, பள்ளூர்- - பனப்பாக்கம் சாலையில் சேதமடைந்த பள்ளங்களை சீரமைத்த இடங்களில், 'ரோடு ரோலர்' வாகனத்தில் வாயிலாக சமப்படுத்தி வாகன விபத்தை தவிர்க்க வழி வகை செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை