உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலையோரம் கருவேல மரங்கள் பாதையை ஆக்கிரமித்ததால் அபாயம்

சாலையோரம் கருவேல மரங்கள் பாதையை ஆக்கிரமித்ததால் அபாயம்

ஸ்ரீபெரும்புதுார்:எச்சூர் -- மேட்டுப்பாளையம் சாலை வழியே நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. ஒரகடம், வல்லம் சிப்காட் தொழிற்சாலைகளில் பணிபுரியம் ஊழியர்கள், இருசக்கர வாகனங்களில் அதிகம் சென்று வருகின்றனர்.வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலையில், போக்குவரத்திற்கு இடையூறாக, இரு புறமும் சீமைக்கருவேல மரக்கிளைகள் வளர்ந்து படர்ந்துள்ளன. இதனால், இவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.இருசக்கர வாகன ஓட்டிகளின் முகம் மற்றும் கண்களை சீமைக்கருவேல மரத்தின் கூர்மையானமுட்கள் பதம் பார்க்கின்றன. எனவே, வாகனஓட்டிகளுக்கு இடையூறாக,சாலையில் படர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ