உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வெங்காடு சாலையில் படர்ந்துள்ள கருவேல மரங்கள்

வெங்காடு சாலையில் படர்ந்துள்ள கருவேல மரங்கள்

வெங்காடுஇரும்பேட்டில் இருந்து, வெங்காடு செல்லும் சாலையில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களால் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.ஸ்ரீபெரும்புதுார் அருகே, பிள்ளைப் பாக்கம் சிப்காட் தொழிற் பூங்காவின் ஒரு பகுதி வெங்காடு ஊராட்சியில் அமைந்துள்ளது.இங்குள்ள தொழிற்சாலைகளுக்கு, வெங்காடு - --கருணாகரச்சேரி சாலையை பயன்படுத்தி சோமங்கலம், சேத்துப்பட்டு, மேட்டுக்கொளத்துார், இரும்பேடுஉள்ளிட்ட கிராமத்தினர் செல்கின்றனர்.இந்நிலையில், இந்த சாலையில் இரும்பேடு கிராமத்தில் இருந்து, வெங்காடு செல்லும் சாலையின் இருபுறமும் ஏராளமான சீமை கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன.இதன் முள் கிளைகள் சாலையில் படர்ந்துள்ளன. இதனால், இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் முட்கள் மீது வாகனத்தை ஏற்றுவதால் வாகனத்தின் டயர் பஞ்சர் ஆகிறது. மேலும், சீமை கருவேல மரத்தின் முள் கிளைகள் சாலையில் நீட்டிக் கொண்டிருப்பதால் வாகன ஓட்டிகளின்கண்களை பதம் பார்க்கிறது.இதனால், சாலையோரம் படர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை