வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கொஞ்சம் ஏற்படுபண்ணுகள் உத்திரமேரூர் நகராட்சி நிர்வாகமே பயணியர் அவதிப்படுகிறார்கள் வெயிலில் மழையில் வயதான ஆண்கள் பெண்கள் நிற்க முடியாமல் அவதி படுகின்றார்கள்
உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேருந்து நிலையத்தில் இருந்து, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.இப்பேருந்து நிலையத்தில், 2016ல், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், 60 லட்சம் ரூபாய் செலவில் பயணியர் நிழற்கூரை அமைக்கப்பட்டது.எனினும், உத்திரமேரூரில் இருந்து, வந்தவாசி, போளூர், தாம்பரம், சென்னை போன்ற பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள், பேருந்து நிலையம் எதிரே உள்ள பிரதான சாலை வழியாக செல்கின்றன.இதனால், பிரதான சாலை நிறுத்தத்திலும் நிழற்குடை வசதி ஏற்படுத்த வேண்டும் என பயணியர் வலியுறுத்தினர்.அக்கோரிக்கையை ஏற்று, உத்திரமேரூர் தி.முக., - எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், 49 லட்சம் ரூபாய் செலவில், பேருந்து நிறுத்த எதிர்புற சாலையின் இரு இடங்களில் பயணியர் நிழற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.இந்த நிழற்கூரையில் பயணியர் அமர இருக்கை வசதி ஏதும் ஏற்படுத்தப்படவில்லை.இந்நிலையில், புதியதாக அமைத்த நிழற்கூரையில், இருசக்கர வாகனங்கள் நிறுத்தியும், பூ, மாலை கடைகள் போன்றவை வைத்தும் ஆக்கிரமிப்புக்கப்பட்டு உள்ளன.எனவே, இங்கு ஆக்கிரமிப்புகள் அகற்றுவதோடு பயணியர் அமர வசதி ஏற்படுத்த வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொஞ்சம் ஏற்படுபண்ணுகள் உத்திரமேரூர் நகராட்சி நிர்வாகமே பயணியர் அவதிப்படுகிறார்கள் வெயிலில் மழையில் வயதான ஆண்கள் பெண்கள் நிற்க முடியாமல் அவதி படுகின்றார்கள்