உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பெண் காவலர்களுக்கு அதிகாரிகள் ஆலோசனை

பெண் காவலர்களுக்கு அதிகாரிகள் ஆலோசனை

காஞ்சிபுரம்:காவல் துறையில் மகளிர் போலீசார் சேர்க்கப்பட்டு, 50 ஆண்டுகள் நிறைவு பெற்று பொன்விழா கொண்டாடப்பட்டது.பொன்விழா கொண்டாட்டத்தின் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புகளில் ஒன்றாக, பெண் காவலர்கள் நலன் சம்பந்தமாக, மூத்த காவல் அதிகாரிகளான, காவல் துறை இயக்குனர் சீமா அகர்வால் தலைமையில், காவல் துறை தலைவர்கள் ராதிகா, லட்சுமி, துணை தலைவர் துரை ஆகியோர் கொண்ட ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.பெண் போலீசாரின் நலன் சம்பந்தமாக இக்குழு ஆலோசித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, காஞ்சிபுரம் சரக காவல் துறையில் உள்ள பெண் போலீஸ் அதிகாரிகள் மற்றும் பெண் போலீசார் உட்பட, 40 பேருடனான ஆலோசனை கூட்டம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் நேற்று முன்தினம் நடந்தது.இதில், மூத்த காவல் அதிகாரிகளான சீமா அகர்வால், ராதிகா, லட்சுமி, துரை ஆகியோர் பங்கேற்றனர். இதில், பெண் காவலர்கள் பணி சார்ந்த உயர் படிப்புகளும், அதன் பயிற்சியை மேற்கொள்வதும், நலத்திட்டங்கள் பற்றியும், பணி மற்றும் குடும்ப வாழ்க்கையை ஒருங்கிணைத்து கொண்டு செல்வது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ