உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பெண்களிடம் தொடர் அத்துமீறல் ரோந்தை தீவிரப்படுத்த உத்தரவு

பெண்களிடம் தொடர் அத்துமீறல் ரோந்தை தீவிரப்படுத்த உத்தரவு

சென்னை சென்னையில் சாலையில் நடந்து சென்ற மற்றும் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்களிடம், சமீபத்தில் மர்ம நபர்கள் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டனர்.இந்த பிரச்னைவிஸ்வரூபம் எடுத்த நிலையில், ரோந்து பணியை தீவிரப் படுத்த வேண்டும்'என, கமிஷனர் அருண் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.சில தினங்களுக்கு முன், பணி முடித்து நந்தனம் மெட்ரோ ரயில் நிலையம் சென்ற, 22 வயது பெண்ணுக்கு, சாலை ஓரத்தில் உட்கார்ந்திருந்த வாலிபர்திடீரென எழுந்து வந்து அத்துமீறலில்ஈடுபட்டுள்ளார்.அதேபோல, மாம்பலம் பகுதியில் சினிமா துறையில் துணை இயக்குனராக உள்ள 27 வயது பெண் இரு சக்கர வாகனத்தை நிறுத்தியபோது, பின்னால் வந்த வாலிபர்சீண்டலில் ஈடுபட்டு உள்ளார்.மேலும், அசோக் நகர் காவல் நிலைய எல்லையில், 20 வயது கல்லுாரி மாணவியிடம் மர்ம நபர்,சில்மிஷத்தில்ஈடுபட்டுள்ளார்.இந்த மூன்று சம்பவங்களிலும், குற்ற வாளிகள் கைதுசெய்யப்பட்டு இருந்தாலும், பெண்களுக்கான பாதுகாப்புகேள்விக்குறியாகிஉள்ளது.இதனால்,கல்லுாரிகள், தனியார் மென்பொ ருள் நிறுவனங்கள், வணிக வளாக பகுதிகள் என, பெண்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில், ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என, கமிஷனர் அருண்உத்தரவிட்டுஉள்ளார்.போலீசார் கூறுகையில்,' கமிஷனர் உத்தரவின் படி மூன்று சம் பவங்கள் குறித்தும் தெற்கு மண்டலகூடுதல் கமிஷனர் கண்ணன் ஆய்வு செய்து, ரோந்து பணியை தீவிரப் படுத்தி உள்ளார்'என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ