உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கேபிள் ஊழியரிடம் பணம் கேட்டு மிரட்டல் ஊராட்சி தலைவியின் கணவருக்கு காப்பு

கேபிள் ஊழியரிடம் பணம் கேட்டு மிரட்டல் ஊராட்சி தலைவியின் கணவருக்கு காப்பு

ஸ்ரீபெரும்புதுார்:காஞ்சிபுரம் மாவட்டம், பென்னலுார் தி.மு.க., ஊராட்சி தலைவியாக இருப்பவர் கல்பனா; தி.மு.க., பென்னலுார் ஊராட்சி கிளை மகளிர் அணி செயலராகவும் பதவி வகித்து வருகிறார். இவரது கணவரும், பென்னலுார் தி.மு.க., கிளை செயலருமாக யுவராஜ் இருந்து வருகிறார்.இந்த நிலையில், ‛பல்ஸ் டெலிசிஸடம்ஸ் பிரைவெட் லிமிடெட்' எனும், இன்டெர்நெட் பைபர் லைன் இணைப்பு வழங்கும் தனியார் நிறுவனம், இம்மாதம் 7ம் தேதி, இருங்காட்டுக்கோட்டையில் இருந்து, பென்னலுாரில் உள்ள அன்னை மருத்துவ கல்லுாரிக்கு இன்டர்நெட் இணைப்பு வழங்கும் பணியில், அந்நிறுவனத்தின் ஊழியர்கள் ஈடுபட்டனர்.அப்போது அங்கு வந்த யுவராஜ், ஊராட்சி தலைவரின் அனுமதி இல்லாமல், உங்களை யார் இங்கு வேலை செய்ய சொன்னது; உங்களிடம் சரியான அனுமதி சான்று இருக்கா, எனக்கு பணம் தராமல் இங்கு வேலை செய்ய விடமாட்டேன் என்று கூறி, அவர்களிடம் இருந்து பைபர் கேபிள் மற்றும் அலுமினிய ஏணி ஆகியவற்ற எடுத்து சென்றார்.இதையடுத்து, அந்த நிறுவனத்தின் மேற்பார்வையாளர் அருண் என்பனர், யுவராஜிடம் மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசியதற்கு, 2 லட்சம் ரூபாய் பணம் தராமல், பொருட்களை தர மாட்டேன் என்று கூறி மிரட்டியுள்ளார்.இது குறித்து, அந்த நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி ஜெபா, ஸ்ரீபெரும்புதுார் போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தார்.போலீசார் வழக்கு பதிந்து விசாரித்ததில், புகாரில் முகாந்தரம் இருந்ததை அடுத்து, தி.மு.க., ஊராட்சி தலைவியின் கணவரும், தி.மு.க., கிளை கழக செயலருமான யுவராஜ், 44, என்பவரை, நேற்று முன்தினம் இரவு கைது செய்து, ஸ்ரீபெரும்புதுார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வேலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

நிக்கோல்தாம்சன்
மார் 12, 2025 07:22

ஸ்டாலின் சார் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் இந்த சொலவடை நினைப்பிருக்கா ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை