மேலும் செய்திகள்
கல்பாக்கம் பணிமனையில் ஊழியர்களுக்கு 'ஏசி' ஓய்வறை
27-Jan-2025
கோனேரிகுப்பம்:காஞ்சிபுரம் ஒன்றியம் கோனேரிகுப்பம் ஊராட்சி, அரசு போக்குவரத்து கழக பணியாளர் குடியிருப்பு வாசிகள், தமிழக சட்டசபை பொது கணக்கு தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் உறுப்பினர் குழுவினரிடம் வழங்கிய மனு விபரம்:காஞ்சிபுரம் ஒன்றியம் கோனேரிகுப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட பொன்னேரிக்கரையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியளர் குடியிருப்பில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன. எனவே, சாலை வசதி ஏற்படுத்த வேண்டும். தெரு மின்விளக்கு இல்லாததால், இரவு நேரத்தில் தெருக்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. வீட்டு உபயோக கழிவுநீர் செல்ல கால்வாய் வசதி இல்லை. இதனால், கால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும்.மேலும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் மையம், ரேஷன் கடை, கண்காணிப்பு கேமரா மற்றும் சுடுகாடு வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
27-Jan-2025