உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கீழம்பியில் பிளாஸ்டிக் சேகரிப்பு

கீழம்பியில் பிளாஸ்டிக் சேகரிப்பு

கீழம்பி, ஒவ்வொரு மாதமும் நான்காவது சனிக்கிழமை ஒருமுறை பயன்படுத்திவிட்டு துாக்கி வீசப்படும் பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி, காஞ்சிபுரம் மாவட்ட துாய்மை பாரத இயக்கம், காஞ்சிபுரம் ஒன்றியம் சார்பில், கீழம்பி ஊராட்சியில், ஒட்டு மொத்த பிளாஸ்டிக் சேகரிப்பு பணி நேற்று நடந்தது.ஊராட்சி தலைவர் மகாலட்சுமி தலைமை வகித்தார். காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, ஒன்றிய சேர்மன் மலர்கொடி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோமளா, பத்மாவதி உள்ளிட்டோர், பிளாஸ்டிக் சேகரிப்பு பணியை துவக்கி வைத்தனர். இதில், 19 கிலோ பிளாஸ்டிக் சேகரிக்கப்பட்டது.தொடர்ந்து பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் எனவும், பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு குறித்தும், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக வந்துள்ள பொருட்களை பயன்படுத்த வேண்டும்என, துாய்மை காவலர்கள், மகளிர் குழு உறுப்பினர்கள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ