உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பிளஸ் 1 தேர்வு துவக்கம் 162 பேர் ஆப்சென்ட்

பிளஸ் 1 தேர்வு துவக்கம் 162 பேர் ஆப்சென்ட்

காஞ்சிபுரம்:தமிழகம் முழுதும் பிளஸ் 1 அரசு பொதுத் தேர்வு துவங்கியது. இம்மாதம் 27ம் தேதி வரை நடைபெறும் பிளஸ் 1 தேர்வுக்கான மொழித்தேர்வு நேற்று நடந்தது.தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், கல்வித் துறை, தேர்வுத் துறை, மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டது.முதல் நாள், பிளஸ் 1 தேர்வு என்பதால், தேர்வு எழுதும்போது மாணவ - மாணவியர் தேர்வு அறையில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து, மாவட்டத்தில் உள்ள 56 தேர்வு மையங்களிலும், முதன்மை கண்காணிப்பு அலுவலர்கள் ஆலோசனை வழங்கினர்.இந்த தேர்வு மையங்களுக்கு, 56 முதன்மை காப்பாளர்கள், 80 பறக்கும் படையினர், தேர்வு கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், 108 பள்ளிகளில், 14,134 பேருக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டு மாணவர்கள் தேர்வுக்கு தயாராகினர்.இதில், தமிழ், பிரெஞ்சு, சமஸ்கிருதம் ஆகிய மொழிபாடங்களில் மாணவர்கள் தேர்வு எழுதினர்.தமிழ்மொழி பாடதிட்டத்தில், 161 மாணவர்கள், பிரெஞ்ச் மொழி பாட திட்டத்தில் ஒருவர் என, மொத்தம் 162 பேர் நேற்று மொழித்தேர்வில் ‛ஆப்சென்ட்' ஆகியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ