உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ரவுடி வசூல் ராஜா கொலை வழக்கில் 5 இளைஞர்களிடம் போலீஸ் விசாரணை

ரவுடி வசூல் ராஜா கொலை வழக்கில் 5 இளைஞர்களிடம் போலீஸ் விசாரணை

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாமல்லன் நகரைச் சேர்ந்தவர் ராஜா என்கிற வசூல் ராஜா, 38; இவர் மீது கொலை, கொலை முயற்சி, மிரட்டி பணம் பறித்தல், அடிதடி என, 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.காஞ்சிபுரம் நகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் இவர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளது.இந்நிலையில், காஞ்சிபுரம் மாமல்லன் நகரில் இருந்து, திருக்காலிமேடு ரேஷன் கடை அருகே நேற்று முன்தினம், பிற்பகல் 12:00 மணியளவில் வந்தார். அப்போது, தனியாக இருந்த வசூல் ராஜா மீது, இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த ஐந்து பேர், திடீரென நாட்டு வெடிகுண்டு வீசியுள்ளனர்.இதில் நிலை தடுமாறி விழுந்த வசூல் ராஜாவின் முகம் மற்றும் உடலின் பல்வேறு பாகங்களில் கத்தியால் சரமாரி வெட்டினர். படுகாயமடைந்த வசூல் ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வெட்டிய நபர்கள், உடனடியாக அங்கிருந்து தப்பித்து ஓடினர்.காஞ்சி தாலுகா போலீசார், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், கொலை செய்த இளைஞர்கள் தப்பித்து ஓடும் காட்சிகள் பதிவாகி உள்ளது. ஸ்கூட்டி வாகனத்தில் ஒருவர் வேகமாக ஒட்டி செல்வதும், பின்னால் ஒருவர் ஓடுவதும் பதிவாகியுள்ளது. இக்கொலையில் இளைஞர்கள் ஈடுபட்டது தெரியவந்தது.காஞ்சிபுரம் டி.எஸ்.பி., சங்கர்கணேஷ் தலைமையில், இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு இளைஞர்களை தேடி வந்த நிலையில், ஐந்து இளைஞர்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.அதில், இரண்டு இளைஞர்கள் கல்லுாரி மாணவர்கள் என கூறப்படுகிறது. போலீசார் பிடித்த இளைஞர்களிடம், கொலை தொடர்பாக தீவிரமாக போலீசார் விசாரிக்கின்றனர்.கொலைக்கான காரணம், நாட்டு வெடிகுண்டு தயாரித்தது எப்படி போன்ற காரணங்களை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை