உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கோழி பண்ணையில் தீ; 2,000 கோழிகள் கருகின

கோழி பண்ணையில் தீ; 2,000 கோழிகள் கருகின

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அடுத்த, பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன், 54. இவருக்கு, முசரவாக்கத்தில் சொந்தமான விவசாய நிலயம் உள்ளது. விவசாய நிலத்தில் கோழி பண்ணை அமைத்து, தனியார் நிறுவன கோழிகளை வளர்த்து வருகிறார்.இந்நிலையில், நேற்று, மாலை 6:00 மணி அளவில் திடீரென கோழிப்பண்ணையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.அப்போது பலமான காற்று வீசியதால் மள மளவென தீ பரவியது. . இதையடுத்து கோழி பண்ணை உரிமையாளர் சீனிவாசன், காஞ்சிபுரம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார்.தீயணைப்பு வாகனம் வருவதற்குள் தீ வேகமாக பரவியதால், பண்ணையில் இருந்து 2,000க்கும் மேற்பட்ட கோழிகள் தீயில் கருகி இறந்தன.மேலும், தீ பரவாமல் இருக்க, தீயணைப்பு துறையினர் தண்ணீர் அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுகுறித்து பாலுசெட்டிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை