உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பரந்துார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணியர் தரையில் அமரும் அவலம்

பரந்துார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணியர் தரையில் அமரும் அவலம்

பரந்துார்:பரந்துார் கிராமத்தில், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இந்த சுகாதார நிலைய கட்டுப்பாட்டில், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த கர்ப்பிணியர் ரத்தம் மற்றும்சர்க்கரை பரிசோதனைக்கு வருகின்றனர்.உணவுக்கு முன் மற்றும் பின் இருவிதமான ரத்த மாதிரிகள் சேகரிக்க வேண்டும். இந்த இடைவெளி நேரத்தில் கர்ப்பிணியர் மற்றும் உடன் செல்வோருக்கு போதிய இருக்கை வசதி இல்லாததால், தரையில் அமர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, பரந்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், இருக்கை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ