| ADDED : ஜூன் 12, 2024 11:13 PM
வாலாஜாபாத்,:சென்னை- - பெங்களூரு நெடுஞ்சாலையில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை சார்பில், ஆறுவழி சாலை திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் அடுத்த, பொன்னேரிக்கரை, செட்டியார்பேட்டை, வேடல், ராஜகுளம், சின்னசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில், ஒரு சில இடங்களில் பணி முடிவுற்றும், சில இடங்களில் பணி தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுகிறது.இந்நிலையில், வேடல்- - ராஜகுளம் இடையிலான சாலையில், மழை நேரங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால், அச்சமயங்களில் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே, இப்பகுதி சாலையில் தேங்கும் மழைநீரை சர்வீஸ் சாலை வழியாக வெளியேற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.