மேலும் செய்திகள்
முன்னாள் படைவீரர் குறை தீர் கூட்டம்
26-Feb-2025
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், வரும் 8ம் தேதி, ரேஷன் கார்டு குறைதீர் முகாம், தாலுகா வாரியாக நடைபெற உள்ளது.காஞ்சிபுரம் தாலுகாவில், சிங்காடிவாக்கம் கிராமத்திலும், உத்திரமேரூர் தாலுகாவில், பழவேரி கிராமத்திலும், வாலாஜாபாத் தாலுகாவில், காவாந்தண்டலத்திலும் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.மேலும், ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவில், செங்காடு கிராமத்திலும், குன்றத்துார் தாலுகாவில், காவனுார் கிராமத்திலும் இக்குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.இங்கு, ரேஷன் அட்டை விண்ணப்பம் செய்வது, பெயர் நீக்கம், சேர்த்தல், மொபைல் போன் எண் சேர்த்தல் உள்ளிட்ட சேவைகளை இங்கு பெற முடியும் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
26-Feb-2025