மேலும் செய்திகள்
ஆண் சடலம் மீட்பு
09-Aug-2024
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் சர்வதீர்த்த குளத்தில், ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக, சிவகாஞ்சி போலீசாருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது.போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரனையில், காஞ்சிபுரம் திருப்புக்கூடல் தெருவைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் ராஜசங்கர், 47, என்பது தெரியவந்தது.அவர், படாளம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றும் கீதா என்பவரின் சகோதரர் என்றும், திருமணம் செய்து கொள்ளாமல், வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு வந்தார் என்பதும் தெரியவந்தது.
09-Aug-2024