உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கான மண்டல அளவில் தடகள போட்டி

பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கான மண்டல அளவில் தடகள போட்டி

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மண்டல அளவில், பாலிடெக்னிக் கல்லுாரி மாணவ- - மாணவியருக்கான தடகள போட்டி காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்தது.காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சாந்தி தலைமை வகித்தார். திருமலை பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் மோகன்ராஜ் முன்னிலை வகித்தார்.இப்போட்டிகளில் சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டத்தைச் சேர்ந்த 300 மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.இதில், 5,000 மீட்டர் ஓட்டப்பந்தயம், குண்டெறிதல், ஈட்டி எறிதல் போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.இதில் ஓட்டப்பந்தயத்தில், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர் டில்லிபாபு முதல் பரிசும், ஆகாஷ் இரண்டாவது பரிசும் பெற்றனர்.திருக்கழுக்குன்றம் திரிபுரசுந்தரி அம்மன் பாலிடெக்னிக் கல்லுாரி முகேஷ் மூன்றாவது பரிசு பெற்றார். செய்யார் அரசு பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர் கோகுல் நான்காவது பரிசு பெற்றார்.வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழும், பதக்கமும் வழங்கப்பட்டது. திருமலை பாலிடெக்னிக் கல்லுாரி உடற்கல்லி இயக்குநர் செல்வராஜ் நன்றி கூறினார்.இந்த மண்டல அளவிலான போட்டிகளை காஞ்சிபுரம் கீழம்பியில் அமைந்துள்ள திருமலை பாலிடெக்னிக் கல்லுாரி ஏற்பாடு செய்திருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ