உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நகரீஸ்வரர் கோவிலில் ரூ.24 லட்சத்தில் திருப்பணி

நகரீஸ்வரர் கோவிலில் ரூ.24 லட்சத்தில் திருப்பணி

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கிழக்கு ராஜ வீதியில், நகரீஸ்வரர் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர்.இதையடுத்து, ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், கோவிலை சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.தொடர்ந்து உபயதாரர் நிதி, 5 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மற்றும் திருக்கோவில் நிதி, 18 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் என, மொத்தம் 24 லட்சத்து 20,000ரூபாய் செலவில் மூலவர் சன்னிதி புதுப்பித்து வணணம் தீட்டுதல், புதிதாக கருங்கல் தரைதளம், பிரகார சன்னிதி, மண்டபம் மற்றும் சுற்றுச்சுவர் புதுப்பித்து வர்ணம் தீட்டும் திருப்பணிக்காக கடந்த பிப்., 11ல் பாலாலயம் நடந்தது.மூன்று மாதத்தில் திருப்பணியை முடித்து கும்பாபிஷேகம் நடத்தும் வகையில், திருப்பணி தீவிரமாக நடந்து வருகிறது என, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ