தெருவிளக்கு வசதி ஏற்படுத்த கோரிக்கை
தொடூர்:காஞ்சிபுரம் அடுத்த தொடூர் கிராமத்தில் இருந்து, கள்ளிப்பட்டு கிராமம் வழியாக, நெல்வாய் கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து கள்ளிப்பட்டு கிராமத்திற்கு செல்வோர், நெல்வாய் கூட்டு சாலையில் இறங்கி, கள்ளிப்பட்டு கிராமத்திற்கு செல்ல வேண்டும். இந்த சாலையில், நெல்வாய் மற்றும் கள்ளப்பட்டு கிராமத்தில் மட்டுமே மின்விளக்கு வசதிகள் உள்ளன. ஏரிக்கரை ஓரங்களில் இருக்கும் மின் கம்பங்களில் மின்விளக்கு வசதி இல்லை. இதனால், சைக்கிள் மற்றும் நடந்து செல்வோர் இரவில் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.எனவே, நெல்வாய் - கள்ளிப்பட்டு இடையே, மின்விளக்கு வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.