மேலும் செய்திகள்
பள்ளியில் ஓவிய கண்காட்சி
16 hour(s) ago
மக்காச்சோள தட்டை சாகுபடியில் தண்டரை விவசாயிகள் ஆர்வம்
17 hour(s) ago
வேலை வாய்ப்பு முகாமில் 2,072 பேர் பங்கேற்பு
17 hour(s) ago
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி சேஷாத்ரிபாளையம் மேட்டுத்தெருவில், 50க்கும் மேற்பட்ட வீடுகளும், அங்கன்வாடி மையம், தனியார் பட்டு ஜவுளிக்கடை உள்ளன.இப்பகுதியில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக சாலையில் கழிவுநீர் வழிந்தோடி வருகிறது.இதனால், அவ்வழியாக செல்லும் பாதசாரிகள், அங்கன்வாடி மையத்திற்கு செல்லும் குழந்தைகள் கழிவுநீரில் நடந்து செல்லும் அவல நிலை உள்ளது. வேகமாக செல்லும் வாகனங்களால், கழிவுநீர் தெளிப்பதால் பாதசாரிகள் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர்.தொடர்ந்து வெளியேறும் கழிவுநீரால், சேஷாத்ரிபாளையம் மேட்டுத்தெருவில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.இப்பகுதியில் அடிக்கடி பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்படுவதால், அடைப்பை முழுதும் நீக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
16 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago