உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சிற்றுந்து சேவை மீண்டும் துவக்கம்

சிற்றுந்து சேவை மீண்டும் துவக்கம்

அய்யப்பன்தாங்கல், அய்யப்பன்தாங்கல் பேருந்து பணிமனையில் இருந்து, தடம் எண்: எஸ்22 சிற்றுந்து, மாங்காட்டிற்கும், குமணன்சாவடி வரை தடம் எண்: எஸ்23 சிற்றுந்தும் இயக்கப்பட்டு வந்தது.இந்த இரு சிற்றுந்து சேவைகளும், சில ஆண்டுகளாக நிறுத்தப்பட்டன. இதுகுறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, தடம் எண்: எஸ்22 சிற்றுந்து சேவை மீண்டும் துவங்கப்பட்டது. இந்நிலையில், அய்யப்பன்தாங்கல் பேருந்து நிலையத்திலிருந்து, குமணன்சாவடி வரை, மீண்டும், தடம் எண்: எஸ்23 சிற்றுந்து சேவை, நேற்று துவங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை