மேலும் செய்திகள்
நிழற்கூரை இன்றி காத்திருக்கும் பயணியர்
25-Aug-2024
கண்டிவாக்கம் : மதுரமங்கலம் அடுத்த, துளசாபுரம் ஊராட்சியில், கண்டிவாக்கம் துணை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து, பிச்சிவாக்கம் கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலையோரம் பயணியர் நிழற்கூரை கட்டடம் உள்ளது.இங்கு, கண்டிவாக்கம், எடையார்பாக்கம் கூட்டுசாலை ஓரம் இருக்கும் சில குடியிருப்புவாசிகள் பேருந்து வழியாக பிச்சிவாக்கம் கிராமத்திற்கு செல்கின்றனர்.பயணியர் நிழற்கூரை கட்டடம் அருகே, சிறு மின் விசை நீர்த்தேக்க தொட்டிக்கு செல்லும் மின் இணைப்பு பெட்டி ஆபத்தாக திறந்து இருக்கிறது.பேருந்திற்கு காத்திருக்கும் போது, சிறுவர்கள் மின் பெட்டியில், விளையாட்டாக கை விட்டு விட்டால், மின் விபத்து ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே, ஆபத்தாக திறந்த நிலையில் இருக்கும் மின் மோட்டர் பெட்டியை பாதுகாப்பாக பூட்டி வைக்க வேண்டும் என, பயணியர் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.
25-Aug-2024