மேலும் செய்திகள்
இன்று இனிதாக காஞ்சிபுரம்
55 minutes ago
வாக்காளர் சிறப்பு முகாமில் 24,864 மனுக்கள் ஏற்பு
1 hour(s) ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி, 22வது வார்டு, திருக்காலிமேடு பூந்தோட்ட தெருவில், 10 ஆண்டுகளுக்கு முன் அப்பகுதியில் பெய்யும் மழைநீர் மற்றும் வீட்டு உபயோக கழிவுநீர் வெளியேறும் வகையில், கால்வாய் அமைக்கப்பட்டது.தரமற்ற முறையில், கட்டுமானப் பணி நடந்ததால், கால்வாய் கட்டப்பட்ட ஒரு சில ஆண்டிலேயே கால்வாய் சரிந்து விழுந்தது. சேதமடைந்த கால்வாயை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம்நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், கால்வாயில் தேங்கியுள்ள கழிவுநீர் வெளியேறாமல் உள்ளதால், சுகாதார சீர்கேடுஏற்படும் நிலை உள்ளது.எனவே, சரிந்து விழுந்துள்ள வடிகால்வாயை அகற்றிவிட்டு, புதிய கால்வாய் அமைக்கமாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.
55 minutes ago
1 hour(s) ago