உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காது கேளாதோர் பள்ளி 50 ஆண்டுகள் நிறைவு

காது கேளாதோர் பள்ளி 50 ஆண்டுகள் நிறைவு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் சதாவரத்தில் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப் பள்ளி, 1975 ஜூலை 31ல் துவங்கப்பட்டது. இப்பள்ளி, உண்டு உறைவிட பள்ளியாக உள்ளது. இங்கு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாவட்டங்களிலிருந்தும், ஏராளமான மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர்.இங்கு பயிலும் மாணவர்களுக்கு, ஆண்டுதோறும் முறையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படுவதும், கேட்கும் திறன் குறைவுக்கேற்றவாறு செவித்துணை கருவிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் அரசால் வழங்கப்படுகிறது.காஞ்சிபுரம் சதாவரத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப் பள்ளியின் 50வது ஆண்டு பொன்விழாவை, நேற்று கலெக்டர் கலைச்செல்வி துவக்கி வைத்தார்.தொடர்ந்து, பள்ளி மாணவ - மாணவியர் கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி, தலைமை ஆசிரியர் வள்ளி, ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை