கருத்து கேட்பு கூட்டம் திடீர் ஒத்திவைப்பு
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட வாலாஜாபாத் தாலுகாவில் உள்ள மாகரல் கிராமத்தில், கல்குவாரி மற்றும் கிராவல் குவாரி அமைக்கப்பட உள்ளன. இதற்கான சுற்றுச்சூழல் அனுமதி பெறுவது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம், ஆற்பாக்கம் கிராமத்தில், நாளை மறுநாள் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களால், இந்த கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.