உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  -தேசிய குத்துச்சண்டையில் தமிழக வீரர்கள் அசத்தல்

 -தேசிய குத்துச்சண்டையில் தமிழக வீரர்கள் அசத்தல்

சென்னை: உ.பி., மாநிலத்தில் நடந்த தேசிய சீனியர் குத்துச்சண்டை போட்டியில், சென்னையைச் சேர்ந்த இருவர் உட்பட நால்வர், பதக்கங்களை வென்று அசத்தினர். இந்திய அமெச்சூர் குத்துச்சண்டை கூட்டமைப்பு சார்பில், தேசிய அளவிலான சீனியர் குத்துச்சண்டை போட்டி, உ.பி., மாநிலத்தில் நடந்தது. நாடு முழுதும் இருந்து, பல்வேறு மாநிலங்களைச் சேர் ந்த வீரர்கள் பங்கேற்றனர். இதில், தமிழ்நாடு அமெச்சூர் குத்துச்சண்டை சங்கம் சார்பில், எட்டு தமிழக வீரர்கள் பங்கேற்றனர். அனைத்து சுற்றுகள் முடிவில், சென்னையைச் சேர்ந்த சிபி வர்கீஸ், 21; மற்றும் வி.பினு, 29; ஆகியோர் தலா ஒரு வெள்ளியும், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ரோகித் ராஜா, 26; வருண், 27; ஆகியோர், தலா ஒரு வெண்கல பதக்கம் வென்று, தமிழகத்தி ற்கு பெருமை சேர்த்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ