உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சியில் கள்ளச்சாராயம் விற்றால் டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவிக்கலாம்

காஞ்சியில் கள்ளச்சாராயம் விற்றால் டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவிக்கலாம்

காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட டாஸ்மாக் நிர்வாகத்தில், 93 மதுபானக் கடைகள், 42 மதுக்கூடங்கள் இயங்கி வருகின்றன. மது மற்றும் பீர் வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன.கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களை தொடர்ந்து, பல்வேறு துறை உயரதிகாரிகள் விழிப்படைந்துவருகின்றனர்.குறிப்பாக, கிராமப்புறங் களில் கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், கஞ்சா விற்போர்,போதை மாத்திரை விற்பனை செய்வோரை அந்தந்த துறை உயரதிகாரிகளுக்குரகசியமாக தெரிவிக்க வேண்டும் என, அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.அதன்படி, டாஸ்மாக் நிர்வாகத்தில், பணியாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதன் விபரம்:தங்கள் பணிபுரியும், டாஸ்மாக் கடை அருகில், கள்ளச்சாராயம், கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை செய்வது தெரிந்தால், உடனடியாக மாவட்ட மேலாளர் 94450 29728/96296 41771 மற்றும் gmail.comஎன்கிற மின் அஞ்சல் முகவரியில் தெரிவிக்கலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ