உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / 10 நிமிடத்தில் பாய்ந்த 140 அம்புகள் வில்வித்தையில் சிறுவன் புது சாதனை

10 நிமிடத்தில் பாய்ந்த 140 அம்புகள் வில்வித்தையில் சிறுவன் புது சாதனை

சென்னை: முகப்பேரைச் சேர்ந்தவர் நிதேஷ், 6; ஒன்றாம் வகுப்பு மாணவர். மூன்று வயதில் இருந்தே சிறுவன் நிதேஷுக்கு வில்வித்தையில் ஆர்வம் அதிகம். இதற்காக, ஐந்து வயது முதல் முகப்பேரில் உள்ள அர்ஜுனா வில்வித்தை அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார்.சிறுவனின் ஆர்வத்திற்கு ஏற்ப பயிற்சியளிக்கப்பட்டது. வில்வித்தையில் உலக சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கில், தீவிர பயிற்சி மேற்கொண்டு வந்தார்.இந்த நிலையில், உலக சாதனைக்கான முயற்சியில், நேற்று முன்தினம் பானையின் மீது நின்றபடி, 14 நிமிடங்களில் 140 அம்புகள் எய்யும் வகையில் திட்டமிடப்பட்டது. முகப்பேரில் உள்ளஅகாடமியில் இந்த நிகழ்வு நடந்தது. ஆனால், சிறுவன் நிதேஷ், பானையில் நின்றபடி, 10 நிமிடம் 22 வினாடியிலே, 140 அம்புகளை எய்து, சாதனைபுத்தகத்தில் இடம்பிடித்தார். 'வேர்ல்டு யங் அச்சுவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்' புத்தகம், நிதேஷின்சாதனையை பதிவு செய்து, சான்றிதழ் வழங்கியது.இதுகுறித்து, சிறுவனின் குடும்பத்தினர் கூறுகையில், ''நிதேஷ் தாத்தா - பாட்டி அரவணைப்பில் வளர்ந்து வருகிறார்.அவரது ஆர்வத்தை கண்டு, வில்வித்தையில் பயிற்சி கொடுத்தோம். மாநில மற்றும் தேசிய அளவில் பல்வேறு போட்டி களில் பங்கேற்று, ஏராளமான பதக்கங்களை வென்றுள்ளார்,'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை