உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மின்னழுத்த பிரச்னைக்கு தீர்வு கூடுதல் மின்மாற்றி அமைப்பு

மின்னழுத்த பிரச்னைக்கு தீர்வு கூடுதல் மின்மாற்றி அமைப்பு

காஞ்சிபுரம்:வாலாஜாபாத் ஒன்றியம், முத்தியால்பேட்டை ஊராட்சி, செல்லியம்மன் நகரில் 170க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. நெசவாளர்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதியில் 100 கே.வி.ஏ., திறன் கொண்ட மின்மாற்றிமட்டுமே அமைக்கப்பட்டு இருந்தது. இதனால், போதுமான இப்பகுதியில் குறைந்த மின்னழுத்தம் நிலவி வந்தது.இதனால், இரவுநேரத்தில் மின்விளக்குகள்போதுமான வெளிச்சம் இல்லாமலும், மின்விசிறிவேகமாக ஓடாமலும் இருந்தது. இதனால், மின்சாதனங்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. மின்னழுத்தம் பிரச்னைக்கு தீர்வு காண, கூடுதல் திறன் கொண்ட மின்மாற்றி அமைக்க வேண்டும் என, இப்பகுதியினர் வலியுறுத்திவந்தனர்.இந்நிலையில், அய்யன்பேட்டை மின்பிரிவு அலுவலகம் சார்பில், செல்லியம்மன் நகரில் மின்னழுத்த பிரச்னைக்கு தீர்வுகாணும் வகையில், கூடுதலாக 63 கே.வி.ஏ., திறன் கொண்ட மின்மாற்றி கிரேன் வாயிலாக நேற்று அமைக்கப்பட்டது.இரு தினங்களில் மின்மாற்றி மின் இணைப்பு வழங்கப்படும். இதனால்,செல்லியம்மன் நகருக்கு சீரான மின்சாரம்வழங்கப்படும் என, மின்வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ