மேலும் செய்திகள்
லாரி மீது பைக் மோதல் மாணவர்கள் இருவர் பலி
16 hour(s) ago
கல்லுாரியில் தேசிய கருத்தரங்கம்
20 hour(s) ago
பருவமழை முன்பாகவே நிரம்பிய 8 ஏரிகள்
21 hour(s) ago
உத்திரமேரூர் ஏரியில் மண் கடத்தல்
16-Oct-2025
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் - செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் - திருத்தணி வரையில், 85 கி.மீ.,க்கு இரு வழிச்சாலை உள்ளது. இச்சாலை, சென்னை - கன்னியாகுமரி சாலை விரிவாக்க திட்டத்தில், நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது.காஞ்சிபுரம் - செங்கல்பட்டு வரையில், 41 கி.மீ., துாரத்திற்கு, 448 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து பணிகள் நடந்து வருகின்றன. இதில், 75 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. மேலும், வாலாஜாபாத் புறவழிச்சாலையில், உயர்மட்ட பாலங்களின் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.இதில், அய்யன்பேட்டை பஜாரில் சாலையோரம் கோவில் அகற்றாததால், சாலை விரிவுபடுத்தும் பணி கிடப்பில் போடப்பட்டது. இரு மாதங்களுக்கு முன் கோவில் அகற்றப்பட்டு, மழைநீர் கால்வாய் கட்டப்பட்டது.இதையடுத்து, அந்த இடத்தில் கடந்த மாதம் தார்ச்சாலை அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. நேற்று, முத்தியால்பேட்டை கூட்டுச்சாலையின் இருபுறமும் வேகத்தடைகள் அமைக்கப்பட்டன.இந்த பணிக்கு, காஞ்சிபுரம் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் ஏகனாம்பேட்டை வரையிலும், செங்கல்பட்டு மார்க்கமாக செல்லும் வாகனங்கள் நத்தப்பேட்டை வரையிலும் 2 கி.மீ., துாரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.குறிப்பாக, ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல முடியாத அளவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, வாலாஜாபாத் போலீசார் வாகன நெரிசலை சரிசெய்தனர்.
16 hour(s) ago
20 hour(s) ago
21 hour(s) ago
16-Oct-2025