உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வெள்ளிக்கிழமையில் வாரசந்தை செவிலிமேடில் இன்று துவக்கம்

வெள்ளிக்கிழமையில் வாரசந்தை செவிலிமேடில் இன்று துவக்கம்

செவிலிமேடு:காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் பழைய கட்டடத்தில் ராஜாஜி மார்க்கெட் இயங்கி வந்தது. புதிய கட்டடம் கட்டுமானப் பணிக்காக, 2022ம் ஆண்டு, ராஜாஜி மார்கெட், ஓரிக்கையில் இடமாற்றம் செய்யப்பட்டு தற்காலிகமாக இயங்கி வந்தது.இங்கு, காஞ்சிபுரம், ஓரிக்கை, செவிலிமேடு சுற்றியுள்ள பகுதியினர் தங்களது வீட்டிற்கு தேவையான காய்கறிகள் வாங்கி வந்தனர்.இந்நிலையில், ஓரிக்கையில் தற்காலிகமாக இயங்கி வந்த கடைகள் அனைத்தும், ரயில்வே சாலையில் புதிதாக கட்டப்பட்ட ராஜாஜி மார்க்கெட்டிற்கு, கடந்த மாதம் 14ம் தேதி இடமாற்றம் செய்யப்பட்டு விற்பனை நடந்து வருகிறது.ஓரிக்கையில் இயங்கிய தற்காலிக ராஜாஜி மார்க்கெட் பழைய இடத்திற்கே சென்று விட்டதால், ஓரிக்கை, செவிலிமேடு உள்ளிட்ட பகுதியை சுற்றியுள்ளவர்கள் காய்கறிகள் வாங்க 5 கி.மீ., துாரம் பயணித்து, ரயில்வே சாலையில் உள்ள ராஜாஜி மார்க்கெட்டிற்கு சென்று வர வேண்டிய நிலை உள்ளது.இதனால், ஓரிக்கை, செவிலிமேடு சுற்றியுள்ள பகுதிவாசிகளுக்காக தற்காலிக ராஜாஜி மார்க்கெட் இயங்கிய இடத்தின் அருகில் உள்ள செவிலிமேடு, மிலிட்டரி ரோடு, ஓரிக்கை மின்வாரிய அலுவலகம் அருகில் உள்ள அத்திவரதர் நகரில், வாரசந்தை இன்று முதல் துவங்குகிறது.வாரந்தோறும் வெள்ளிக்கிழமையில், மாலை 3:00 மணி முதல், இரவு 10:00 மணி வரை வார சந்தை நடைபெறும். இங்கு காய்கறி, கனிகள் கிடைக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ