உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நிழற்குடை வசதியின்றி பயணியர் மதுார் கூட்டுச்சாலையில் அவதி

நிழற்குடை வசதியின்றி பயணியர் மதுார் கூட்டுச்சாலையில் அவதி

உத்திரமேரூர் : உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடல்- - சாலவாக்கம் சாலையில், மதுார் கூட்டுச்சாலை உள்ளது.சுற்றுவட்டார கிராமத்தினர் இங்குள்ள பேருந்து நிறுத்தத்திற்கு வந்து, காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத், சாலவாக்கம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றனர்.இப்பேருந்து நிறுத்தத்தில் இருந்த சிறிய அளவிலான பயணியர் நிழற்குடை பழுதடைந்து, கடந்த ஆண்டு இடிந்தது. அதையடுத்து, இதுவரை பயணியர் நிழற்குடை வசதி ஏற்படுத்தாமல் உள்ளது.இதனால், இப்பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் பயணியர், மழை மற்றும் வெயில் நேரங்களில் அவதிப்படுகின்றனர்.மேலும், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பெண் தொழிலாளர்கள், இரவு நேரங்களில் பணி முடித்து இப்பேருந்து நிறுத்தத்திற்கு வந்து அங்கிருந்து பல பகுதிகளுக்கு செல்கின்றனர். மதுார் கூட்டுச்சாலை பகுதியில் இதுவரை மின் வசதி இல்லாததால், இருள் சூழ்ந்து, பெண் தொழிலாளர்கள் அச்சத்திற்கு உள்ளாகின்றனர்.எனவே, மதுார் கூட்டுச்சாலை பேருந்து நிறுத்தத்தில், புதியதாக பயணியர் நிழற்குடை கட்டடம் மற்றும் மின்வசதி ஏற்படுத்த பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை