மேலும் செய்திகள்
செங்கல்பட்டில் விபத்தில் முதியவர் படுகாயம்
07-Feb-2025
இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி பால்காரர் பலி
17-Feb-2025
மறைமலைநகர், காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கம் பகுதியைச் சேர்ந்த சங்கர் மனைவி சத்யா, 36. நேற்று மதியம் தன் அண்ணன் விஜய் என்பவருடன், பஜாஜ் டிஸ்கவர் இருசக்கர வாகனத்தில், செங்கல்பட்டு -- காஞ்சிபுரம் சாலையில் சாலவாக்கம் நோக்கி சென்றார்.பாலுார் அடுத்த மேலச்சேரி பகுதியில் சென்ற போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம், இவர்களது வாகனம் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில், சத்யாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. விஜய்க்கு லேசான காயம் ஏற்பட்டது. அங்கிருந்தோர் இவர்கள் இருவரையும் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருவருக்கும், அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து, பாலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
07-Feb-2025
17-Feb-2025