உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / டூ வீலர் - வேன் மோதல் இரண்டு பேர் உயிரிழப்பு

டூ வீலர் - வேன் மோதல் இரண்டு பேர் உயிரிழப்பு

திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் அருகில் உள்ள இரும்புலிச்சேரியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார், 33. இவரது சித்தப்பா மகன் கடும்பாடி, 45; கூலித் தொழிலாளர்கள்.நேற்று காலை 8:00 மணிக்கு, இருவரும் 'ஸ்பிளண்டர் பிளஸ்' இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுச் சென்றனர். தினேஷ்குமார் வாகனத்தை ஓட்டினார்.அதே பகுதியில் சென்றபோது, நாவலுார் தனியார் நிறுவன ஊழியர் வாகனம், இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், தினேஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கடும்பாடி படுகாயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.மருத்துவர்கள் பரிசோதனையில், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து, தினேஷ்குமாரின் சகோதரர் சுரேஷ், திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்படி, போலீசார் விசாரிக்கின்றனர்.

முதியவர் பலி

சிங்கபெருமாள் கோவில் அடுத்த குருவன்மேடு தடிகாரன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் வீரராகவன், 69; ஆடு மேய்க்கும் வேலை பார்த்து வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு வில்லியம்பாக்கம் கிராமத்தில் இருந்து குருவன்மேடு செல்ல காத்திருந்தார். அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு சென்றார். வில்லியம்பாக்கம் அருகில் வந்த போது, இருசக்கர வாகனம் நிலை தடுமாறி விழுந்ததால், வீரராகவன் படுகாயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார். இதுகுறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி