உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கிடப்பில் போட்ட சாலை பணி விரைந்து முடிக்க வலியுறுத்தல்

கிடப்பில் போட்ட சாலை பணி விரைந்து முடிக்க வலியுறுத்தல்

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் ஒன்றியம், திருப்பருத்திகுன்றம்ஊராட்சி, ஜெ.எஸ்., நகருக்கு, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், 2023- - 24ன் கீழ் 5.14 லட்சம் ரூபாய் செலவில், 78 மீட்டர் நீளத்திற்கு புதிதாக சிமென்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில், திருப்பருத்திகுன்றம் பிரதான சாலையுடன், ஜெ.எஸ்., நகர் இணையும் சாலையுடன் முழுமையாக இணைக்கப்படவில்லை.இதில், 4 மீட்டர் துாரத்திற்கு சாலை அமைக்க ஜல்லி கற்கள் மட்டும் கொட்டப்பட்டு சாலையில் பரப்பி விடப்பட்டுள்ளது. அடுத்த கட்ட பணியை துவக்காமல், சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், ஜல்லி கற்களின் மீது செல்லும் இருசக்கர வாகனங்கள் பழுதாகின்றன.காலணி அணியாமல் செல்வோர் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனால், ஜெ.எஸ்., நகரில் விடுபட்ட சாலைப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, ஜெ.எஸ்., நகரினர் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை