மேலும் செய்திகள்
மேம்பாலத்தில் மின் விளக்குகள் பழுது
06-Aug-2024
பொன்னேரிக்கரை: சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில், தங்க நாற்கர சாலை உள்ளது. இந்த நான்குவழி சாலையை, 654 கோடி ரூபாய் செலவில், ஆறுவழிச் சாலையாகவும், 18 இடங்களில் சிறு பாலங்கள் மற்றும் மூன்று இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கும் பணி நடந்து வருகின்றன.இந்த விரிவாக்க பணிகள் கிடப்பில் போடப்பட்டு உள்ளதால், அனைத்து விதமான வாகனங்களும் தான்தோன்றி தனமாக செல்கின்றன. உதாரணமாக, பரந்துார், காரை, சிறுவாக்கம் ஆகிய பகுதிகளில் இருந்து காஞ்சிபுரம் மார்க்கமாக செல்லும் வாகனங்கள், காரப்பேட்டை புற்றுநோய் மருத்துவமனை, பொன்னேரிக்கரை வழியாக செல்ல வேண்டும்.அதே நேரத்தில், திருப்பூர், சேலம், பெங்களூரு, ஒசூர், ஆரணி ஆகிய பகுதிகளில் இருந்து, சென்னை மார்க்கமாக செல்லும் வாகனங்கள் காரை கூட்டு சாலையை கடக்கும் போது, ஒரு வாகனம் மற்றொரு வாகனத்தின் மீது மோதிக் கொள்ளும் அபாயம் உள்ளன.எனவே, பொன்னேரிக்கரை மற்றும் பரந்துார் மார்க்கமாக ஏதேனும் ஒரு பகுதியில், வேகத்தடை அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.
06-Aug-2024