உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சியில் அக்.18 வரை வாக்காளர் சரி பார்ப்பு பணி

காஞ்சியில் அக்.18 வரை வாக்காளர் சரி பார்ப்பு பணி

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2025 ஜன.1ம் தேதியை தகுதி நாளாக கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணிகள், கடந்த 20ம் தேதி முதல் துவங்கி நடக்கிறது. 2025 ஜன.6ம் தேதியனறு வாக்காளர் பட்டியல் வெளியிட பல்வேறு திருத்த நடவடிக்கைகளுக்கான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.மேலும், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்களும் நடக்க உள்ளன. இதற்கு முன்பாக, ஓட்டுச்சாவடி மறுசீரமைப்பு பணிகள் நடக்க உள்ளது.ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், தங்கள் பகுதியில் வசிக்கும் அனைத்து வாக்காளர்களின் விபரங்களை, வரும் அக்டோபர் 18ம் தேதி வரை, வீடு வீடாக சென்று சரி பார்க்க உள்ளனர்.ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு தேடி வரும்போது, பெயர், வயது, புகைப்படம், முகவரி திருத்தம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள தெரிவிக்கலாம்.பெயர் சேர்க்கவும், நீக்கவும் செய்யலாம். வீடு தேடி வரும் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு, வாக்காளர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி கேட்டுக் கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ