மேலும் செய்திகள்
நிழற்குடையை சூழ்ந்த செடிகள் அகற்றப்படுமா?
09-Feb-2025
உத்திரமேரூர், உத்திரமேரூர் ஒன்றியம், வெங்கச்சேரி கிராமத்தில், காஞ்சிபுரத்தில் இருந்து உத்திரமேரூர் செல்லும் சாலைஉள்ளது.இங்கு, பொதுமக்கள் பேருந்து பிடித்து செல்ல, 25 ஆண்டுக்கு முன் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது. வெங்கச்சேரி, காவாம்பயிர், கடம்பர்கோவில், நெய்யாடுபாக்கம் ஆகிய கிராமத்தினர் இந்த நிழற்குடையை பயன்படுத்தி காஞ்சிபுரம், உத்திரமேரூர் ஆகிய பகுதிகளுக்கு பேருந்து பிடித்து,தினமும் சென்றுவந்தனர்.இந்நிலையில், நான்கு ஆண்டுக்கு முன் காஞ்சிபுரம் - - உத்திரமேரூர் நெடுஞ்சாலை விரிவுப்படுத்தும் பணி நடந்தது. அப்போது, நெடுஞ்சாலையோரத்தில் இருந்தவெங்கச்சேரி பயணி யர் நிழற்குடை இடித்து அப்புறப்படுத்தப் பட்டது.இடிக்கப்பட்டபயணியர் நிழற்குடை இன்றுவரை கட்டப்படாமல் உள்ளது. இதனால் பேருந்துக்காக வரும் பயணியர், சாலையிலே நிற்க வேண்டிய சூழல்நிலவுகிறது.அதேபோல, மாகரல் துணை மின் நிலைய பேருந்து நிறுத்தத்தில் இருந்த நிழற்குடையும் இடித்து அகற்றப்பட்டு, புதியது கட்டாததால் பயணியர் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.எனவே, இடிக்கப்பட்ட நிழற்குடையை விரைந்து கட்ட,துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
09-Feb-2025